(Faith Matters)சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.
பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோமர் 4:3
ஆபிரகாம் தன் பெரிய சாதனைகளுக்காகவோ அல்லது தர்ம காரியங்களுக்காகவோ அல்ல, மாறாக தேவனை விசுவாசித்ததால்தான் நீதியுள்ளவனாகக் கருதப்பட்டான். அவர் தேவனிடத்தில் தன் கண்களை நிலைநிறுத்தி, தேவன் தாம் வாக்குறுதி அளித்ததைச் செய்ய வல்லவர் என்று உறுதியாக நம்பியதாலேயே நீதியுள்ளவராக எண்ணப்பட்டார். கிட்டத்தட்ட 100 வயதான ஆபிரகாம், தம் மூலமாகவும், தம்முடைய சந்ததி மூலமாகவும் உலகம் முழுவதும் ஆசீர்வதிக்கப்படும் என்று விசுவாசித்தார். ஆபிரகாமும் அவருடைய மனைவி சாராளும் குழந்தையில்லாமல், குழந்தை பெறும் வயதைக் கடந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இது சாத்தியமற்றது. ஆனாலும், தேவன் தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாக (righteousness) எண்ணப்பட்டது. விசுவாசத்தின் இலக்கு: (The Object of Faith) இன்று நாம், “உங்களை நீங்களே நம்புங்கள்” அல்லது “நம்பிக்கை வை” போன்ற சொற்றொடர்களைக் கேட்கிறோம். விசுவாசம் கொண்டிருப்பதைக் காட்டிலும், விசுவாசத்தின் இலக்கு மிக முக்கியமானது. ஆபிரகாம் தன்னைத்தானே விசுவாசிக்காமல், தேவனை விசுவாசித்தார்.அவர் தன்னை நம்பவில்லை, ஏனெனில், அவர் தன்னை எவ்வளவு கடினமாக நம்பினாலும், குழந்தை பெறும் வயதைக் கடந்துவிட்ட 90 வயதிற்கு மேற்பட்ட ஒரு தம்பதியருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று அவருக்குத் தெரியும். எனவே, ஆபிரகாம் ஜீவனுக்கே ஆதாரமானவரை விசுவாசித்தார். இதைத் தவிர வேறு எதையேனும் விசுவாசிப்பது ஒருவிதமான மறுப்பாகவோ அல்லது அதையும்விட மோசமாக, பெருமையாகவோ இருந்திருக்கும்.இன்று தேவனுடனான உங்கள் விசுவாசப் பயணத்தில் நீங்கள் எங்கே இருந்தாலும், அவர் உங்களுடன் ஆழமான நட்பை விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவன் உங்களைக் காண்கிறார், மேலும் உங்களை நம்பிக்கையினாலும் ஜீவனாலும் நிரப்ப விரும்புகிறார்.

சிந்திப்பதற்கான கேள்விகள்:
- உங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை என்றால் என்ன?
- நம் விசுவாசத்தின் இலக்கு என்ன/யார்?
- இன்று நீங்கள் எதற்காக தேவனை நம்புகிறீர்கள்?
விசுவாசமானது, நாம் நம்பியிருக்கிறவைகளின் நிச்சயமும், காணப்படாதவைகளின் உறுதியுமான நம்பிக்கையும் ஆகும். எபிரேயர் 11:1
